சென்னை: லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெல்லேவின் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அப்பல்லோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.
லண்டனிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெல்லே கடந்த 30 ம் தேதி ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த அவர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவ குழுவினருடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
தற்போது, மருத்துவர் ரிச்சர்ட் உடனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
- Post Editor >>>Prabu<<<
- ___________________________________~~~~ Advertisement ~~~~~----------------------------------------------------------*【நண்பர்களின் கவனத்திற்கு】**நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்**டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....**100%உண்மை**Application Download Link 👇👇👇👇*___________________________________________________________________________________________________________________இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Post A Comment:
0 comments: