கோவை : கோவையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபரை மாநகர போலீஸ் படையினரின் உதவியுடன் என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தென்மாநிலங்களில் ஊடுருவியிருப்பதாக, மத்திய புலனாய்வு அமைப்பான ஐ.பி., மற்றும் தேசிய புலன்விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ.,விற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடந்த சில மாதங்களாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்த உளவுத்துறையினர், அங்கு பதுங்கியிருந்த மூவரை, நேற்று அதிகாலையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அந்நபர்களிடம் நடத்திய ரகசிய விசாரணையில், நவாஸ் என்பவன், கோவை நகரிலுள்ள உக்கடம், ஜி.எம்., நகரில் பதுங்கியிருப்பது அம்பலமானது.
இதையடுத்து, மூன்று எஸ்.பி.,க்கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இரவில் மாநகர போலீஸ் படையினரின் உதவியுடன், சந்தேகத்துக்குரிய வீட்டை சுற்றிவளைத்தனர். அங்கிருந்த நவாஸ், 21, கைது செய்யப்பட்டான். இவன், தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து வருவதாக கூறப்படுகிறது. இவனிடம் இருந்து மொபைல் போன், 'லேப் டாப்' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், ஆவணங்களை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Post A Comment:
0 comments: